நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சாலை போக்குவரத்து அபராதங்களுக்கு 60 விழுக்காடு வரை தள்ளுபடி: உள்துறை அமைச்சகம் 

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சாலை போக்குவரத்து அபராதங்களுக்கு 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கவுள்ளதாக உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. 

இந்தச் சலுகை நவம்பர் 22-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Program Dua Tahun Kerajaan Madani நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்தத் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் சாலை போக்குவரத்து அபராதக் கட்டணங்களைச் செலுத்தலாம். 

தள்ளுபடிக்கான அளவுகோல்கள் வெளியிடப்படவில்லை.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset