நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவுப் பேருந்துகளில் socket எனப்படும் மின்னிணை நுழைவுகளைப் பயன்படுத்த தற்காலிக தடை: அந்தோனி லோக் 

கோலாலம்பூர்: 

விரைவுப் பேருந்துகளில் socket எனப்படும் மின்னிணை நுழைவுகளைப் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

இம்மாதம் முதலாம் தேதி விரைவுப் பேருந்து ஒன்றில் socket-யைப் பயன்படுத்தி கைப்பேசிக்கு மின்னூட்டம் செய்த போது 18 வயது இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

விரைவுப் பேருந்தில் முறையற்ற மின் இணைப்பு காரணமாக இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விரைவுப் பேருந்தில் USB உட்பட  socket-களைப் பயன்படுத்த தரைப் போக்குவரத்து ஆணையம், (APAD) தற்காலிகத் தடையை அமல்படுத்தியுள்ளது. 

அனைத்து பேருந்து நடத்துநர்களுக்கும் அறிவிப்புக் கடிதம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

எனவே தற்போதைக்கு விரைவுப் பேருந்தின் தரத்தை ஆய்வு செய்யும் வரை அனைத்தும் தடையில் இருக்கும். 

புதிய கூடுதல் வயரிங் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம்வெளியிடும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்  என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset