நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல லங்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கொள்ளை: 16 பேர் கைது கைத்துப்பாக்கி பறிமுதல்

கோல லங்காட்:

கோல லங்காட்டில் உள்ள தொழிற்சாலையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது என்று கோல லங்காட் போலிஸ்படை துணைத் தலைவர் முகமத் சூஃபியான் அமின் கூறினார்.

கோலா லங்காட்டின் தெலோக் பங்லிமா கராங் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் கொள்ளை சம்பவம் நடந்ததாக தொழிற்சாலை மேலாளரிடம் இருந்து புகார் கிடைத்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு சீன பிரஜைகள் உட்பட 16 பேரை போலிசார் கைது செய்தனர்.

கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடந்த சோதனை நடவடிக்கையின் போது, ஒரு கைத்துப்பாக்கி, 20 துப்பாக்கி தோட்டாக்கள், ஒரு கார், உலோகத் துண்டுகள், குப்பைகள் ஏற்றப்பட்ட ஒரு லாரி ஆகியவற்றுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச் சம்பவம் குறித்து போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset