நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MyJPJ செயலியில் சாலை வரியைப் புதுப்பிக்க பயனர்களுக்கு நினைவூட்டல்கள் வழங்கும் அம்சம் செயல்படுத்தப்படவுள்ளது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்: 

MyJPJ செயலியில் சாலை வரியைப் புதுப்பிக்க பயனர்களுக்கு நினைவூட்டல்கள் வழங்கும் அம்சம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கப்பட்ட முயற்சியின் கீழ் சாலைப் போக்குவரத்துத் துறை சேவைகளை இலக்கவியல் மயமாக்குவதற்கான அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்களின் வசதிக்கேற்ப MyJPJ செயலி செயலியை மேம்படுத்துவதில் அமைச்சகமும் சாலை போக்குவரத்து துறையும் உறுதியுடன் உள்ளன என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த அம்சம் முழுமையாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் தயாரானதும் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல், பயனர்கள் தங்கள் சாலை வரி அல்லது மோட்டார் வாகன உரிமங்கள், ஓட்டுநர் உரிமங்களை நேரடியாக செயலியின் மூலம் புதுப்பிக்க முடிந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset