நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் டாய்ம் ஜைனுடினுக்கு எதிரான வழக்குகளை அரச தரப்பு கைவிட்டது 

கோலாலம்பூர்: 

சொத்து விபரங்களை அறிவிக்ககோரி முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினுக்கு எதிரான வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது 

துன் டாய்ம் சைனுடின் காலமானதால் அவருக்கு எதிரான வழக்கு மீட்டுக்கொள்ளப்படுவதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு துணை வழக்கறிஞர் வான் ஷஹாருதீன் வான் லடின் கூறினார் 

அவரின் மறைவைத் தொடர்ந்து எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்‌ஷன் 36(2)இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை மீட்டுக்கொள்ளப்படுகிறது 

இவ்வேளையில் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு தாங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக அவர் சொன்னார். 

முன்னதாக, 38 நிறுவனங்கள், சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் உள்ள நிலங்கள் தொடர்பான சொத்து விபரங்களை அறிவிக்க தவறிய நிலையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது 

இருப்பினும், வழக்கு விசாரணையின் போது கடந்த நவம்பர் 13ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset