நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் புதிய கொள்கையை எதிர்கொள்ள மலேசியா தயாராகவுள்ளது: தெங்கு ஜஃப்ருல்

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் புதிய கொள்கையை எதிர்கொள்ள மலேசியா தயாராகி வருகின்றது என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜப்ருல் தெரிவித்துள்ளார். 

இந்தக் கொள்கை மாற்றங்கள் குறைகடத்தி தொடர்பான பொருட்களின் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும்   தெங்கு ஜப்ருல் கூறினார். 

சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட இறக்குமதி வரிகளின் சாத்தியமான அதிகரிப்பு குறித்த தெங்கு ஜப்ருல் கவலை தெரிவித்தார்.

மேலும், இந்தப் புதிய கொள்கை குறைக்கடத்தி சிப்களின் விலையைப் பாதிக்கும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் செயல்படுத்தினால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 60 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் மற்றும் குறைக்கடத்தி சில்லுகளின் விலையை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் குறைக்கடத்தி சில்லுகளை நம்பியிருக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம் என்று ஜஃப்ருல் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset