நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்

கோலாலம்பூர்:

கல்வி, பொது சேவைத்துறையில் சம உரிமையை நாட்டில் உள்ள இந்திய சமுகம் எதிர்பார்க்கிறது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் இதனை கூறினார்.

நாட்டில் வாழும் இந்திய சமுகம்  கல்வி, பொது சேவைத் துறை ஆகியவற்றில் சம உரிமையை எதிர்பார்க்கிறது.

குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தின்  கீழ் அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய சமுகம் நம்புகிறது.

2025 பட்ஜெட்டில் முன்னேற்றத்திற்கு இடமிருந்தாலும், இந்திய சமுகத்திற்கு ஆண்டுதோறும் மித்ராவின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

இது இந்திய சமூகம் இன்னும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுகிறது.

குறிப்பாக மித்ராவின் கீழ் 14 மக்கள் நலத் திட்டங்கள் உள்ளது.

சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ பயிற்சித் திட்டம், உயர் கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்களுக்கான உதவி நிதி, சிறுநீரக சுத்திகரிப்புக்கான நிதியுதவி ஆகியவை மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

இதை தவிர்த்து தொழில்
முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணனின் முயற்சியின் மூலம் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைகிறது.

இந்திய மகளிருக்காக அமானா இக்தியாரின் பெண் திட்டம், வணக்கம் மடானி, இந்திய கூட்டுறவு கழகங்களுக்கான மாநாடு உட்பட 7 திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்கு பயனாக இருந்து வருகிறது.

மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியில் கேசவன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset