நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 கிலோ மீட்டர் சாலையை 100 மணி நேரத்தில் நிர்மாணிப்பதை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்: அஹ்மத் மஸ்லான்

கோலாலம்பூர்:

100 கிலோ மீட்டர் சாலையை 100 மணி நேரத்தில் நிர்மாணிப்பதை இந்தியாவிடம் இருந்து மலேசியா கற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுப்பணி துணையமைச்சர் டத்தோஶ்ரீ அஹ்மத் மஸ்லான் இதனை கூறினார்.

கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையில் கட்டுமான பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆகவே இந்தியாவில் உள்ள குத்தகையாளர்களிடம் அதை எவ்வாறு விரைவாக முடிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு மே மாதத்தில் காசியாபாத் - அலிகார் இடையே 100 கிலோ மீட்டர தூரம் கொண்டு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை கிட்டத்தட்ட 100 மணி நேரத்தில் வெற்றி கரமாக கட்டி முடிக்கப்பட்டது.

இதுவே தாம் அவ்வாறு கூறியதற்கான முக்கிய காரணம்.

மக்களவையில் பொதுப் பணித்துறை அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பேசிய அஹ்மத் மஸ்லான்,

கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset