நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்

செந்தோசா:

இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.

இந்திய கிராமங்களை மேம்படுத்துவதுடன் அதனை அமைச்சின் கட்டுப்பட்டில் வைத்திருக்க வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு திட்டம் கொண்டுள்ளது.

அமைச்சின் இத்திட்டம் மலேசியா உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான வரலாற்றுப் படியாகும்.

அமைச்சின் இம்முயற்சி பாராட்டுக்குரிய விஷயமாகும்.

மேலும் இது நாடு முழுவதும் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கை என்று அவர் கூறினார்.

அதே வேளையில் நாட்டின் பொருளாதார, சமூக முன்னேற்றத்தை அனுபவிப்பதில் இருந்து அதிக கவனத்தைப் பெறாத சமூகங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

நாட்டில் உள்ள இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சந்திப்பை தொடர்ந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை குழு இதனை அங்கீகரித்துள்ளது.

இது எந்த மக்களையும் விட்டு வைக்கப்படவோ அல்லது ஒதுக்கி வைக்கப்படவோ கூடாது என்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset