செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவரை குற்றவாளி என்று கூறுவது நியாயமற்றது: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவரை குற்றவாளி என்று கூற முயல்வது நியாயமற்ற செயலாகும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மக்களவையில் இதனை தெரிவித்தார்.
எச்ஆர்டி கோர்ப் நிதி தொடர்பில் மலேசிய ஊழல் ஆணையம் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணைக்கு வழிவிடும் வகையில் தான் அதன் தலைமை இயக்குநர் சொந்த விருப்பத்தின் பேரில் விடுப்பில் சென்றார்.
விடுமுறைக்கு பின் அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் எச்ஆர்டி கோர்ப்பில் இருந்து எந்தவொரு அதிகாரிகள் அல்லது தனிநர்கள் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படாததால் அவர்கள் விடுப்பில் செல்வதையோ அல்லது ராஜினாமோ செய்வதையோ அமைச்சு விரும்பவில்லை
அவ்வாறு செய்வதில் எந்தவொரு நியாயமும் இல்லை.
இந்த விவகாரத்தில் விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm