நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எட்டு ஆண்டுகளில் மருந்துகள் வாங்கும் நடவடிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது: ஜுல்கிஃப்லி அஹமத் 

கோலாலம்பூர்: 

2023- ஆம் ஆண்டில் மருந்துகள் வாங்குவதற்கான செலவு எட்டு ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

கடந்த 2015-ஆம் ஆண்டு மருந்துகள் வாங்குவதற்கான செலவு 2.3 பில்லியனாக இருந்த நிலையில் கடந்தாண்டு இந்தச் செலவு 3 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

மருந்துகளின் விலை அதிகரிப்பு, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் புதிய மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றுக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மருந்து சேவைகள் திட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி, 2015 முதல் 2023 வரை மருந்து வாங்குவதற்கு RM23.25 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

மருந்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான செலவினங்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்றும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2015 -ஆம் ஆண்டு தொடங்கி அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கான மருந்துகளை வாங்குவதற்கான மொத்த ஆண்டு செலவு மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான எதிர்பார்ப்புகள் குறித்த அஸ்லி யூசோப்பின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset