நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைப் பிரதமர் அன்வார் சந்தித்தார் 

கோலாலம்பூர்:

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைப் பிரதமர் அன்வார் சந்தித்தார்.

மலேசியா, பிரான்ஸ் இடையிலான வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினோம் என்று பிரதமர் கூறினார். 

மேலும், இந்தக் கலந்துரையாடல் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளையும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒத்துழைப்பையும் உள்ளடக்கியது என்று கூறினார்.

அன்வார் இன்று நவீன கலை அருங்காட்சியகத்தில் G20 உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார்.

2025 ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைவராக மலேசியாவின் பங்கு குறித்து அன்வாரும் மேக்ரோனும் விவாதித்தனர்.

மேலும் ஆசியான்-பிரான்ஸ் மேம்பாட்டு ஒத்துழைப்பு மூலம் மக்ரோனின் ஆதரவுக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு விரைவில் போர் நிறுத்தம் தேவை, அங்குள்ள மக்கள் படும் துன்பங்களுக்கு முடிவு கட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset