நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்விக்காக உலகளாவிய ஒத்துழைப்பை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர்

ரியோ டி ஜெனிரோ:

கல்விக்காக உலகளாவிய ஒத்துழைப்பை வலுவாக விரிவுப்படுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மாணவர்கள் கல்விக்காக ஒரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது முன்னணி பல்கலைக்கழகத்தையோ முழுமையாக நம்பியிருக்க வேண்டும் என்பது காலாவதியான கருத்தாகும்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் இந்த விஷயமும் அடங்கும்.

கல்வி அடிப்படையில் ஆராய்ச்சி. மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

கல்விக்காக சில நாடுகள், கபல்கலைக்கழகங்களைச் சார்ந்து இருக்கும் காலாவதியான சிந்தனையே இதற்குக் காரணம்.

குறிப்பாக தற்போதைய தேவைகள், முன்னேற்றங்களுக்கு இனி பொருந்தாது என்று நான் நினைக்கிறேன்.

இது சம்பந்தமாக, உயர் கல்வி உட்பட தொடர்புடைய அமைச்சுகள் இப்போது பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset