நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்: மலேசியா, பிரேசில் வலியுறுத்தல்

ரியோ டி ஜெனிரோ:

காசாவில் நடந்து வரும் மோதலுக்கு உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டிய அவசரத் தேவையை மலேசியா, பிரேசில் வலியுறுத்தின. 

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் எந்தத் தடையும் இன்றி வழங்கப்படுவதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்.

ஜி20 உச்ச நிலை மாநாட்டையொட்டி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இடையேயான இருதரப்பு சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு  தலைவர்களும் 1967க்கு முந்தைய எல்லைகள், ஐக்கிய நாடுகள் சபையில் முழு பாலஸ்தீனிய உறுப்பினர்களின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசை நிறுவுவதற்கான தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும் சமத்துவமின்மை, பசி, வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், 

இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset