செய்திகள் மலேசியா
அரசாங்கத்தின் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் மலேசியர்கள் ஆதரவளிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வெளிநாட்டிலுள்ள மலேசியர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் அரசாங்கத்தின் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் மலேசியர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் இப்போது ஒரு வலுவான அமைச்சரவையைக் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்த மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளை செயல்படுத்த அரசு அயராது உழைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழல் மற்றும் மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் எந்தக் கட்சியுடனும் மடானி அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சுமார் 200 மலேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் மலேசிய நண்பர்கள் கலந்து கொண்ட இரவு விருந்தில் அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மடானி அரசின் உறுதியையும்ஆவர் விளக்கினார்.
பல நாடுகளுக்கான தொடர் பயணங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம் மற்றும் மலேசிய மக்களுக்கும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm