நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

8 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வர 2,400க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி

சிங்கப்பூர்:

சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 8 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வர 2,400க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட பயணிகளில் சுமார் 40 விழுக்காட்டினர் பிரிட்டனில் இருந்து வருபவர்கள் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்தது.

மற்ற பயணிகள் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லந்து, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அந்த 8 நாடுகளின் பயணிகளும் நேற்றிலிருந்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு மணி 11.59 நிலவரப்படி, இதுவரை 2,409 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Singapore widens border restrictions, ceases port calls for cruises in  Covid-19 fight | TTGmice

அதன்படி இந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் அவர்கள் சிங்கப்பூருக்குள் வரலாம்.

ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளுடனும் சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாட்டை ஏற்கெனவே செய்துகொண்டுள்ளது.

அந்த நாடுகளைச் சேர்ந்த 5,228 பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதி கடந்த மாதம் 8ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்துக்கானது.

- CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset