
செய்திகள் கலைகள்
தனுஷின் பழிவாங்கும் மனநிலை, போலியான மேடைப்பேச்சு நயன்தாரா பரபரப்பு அறிக்கை
சென்னை :
தனது திருமணம் பற்றிய ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.
நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது.
இதற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது.
இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் முடிந்தகையோடு வெளிவரவிருந்த நிலையில், தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது.
இதற்கு தனுஷ்தான் காரணம் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தனுஷை கடும் கோபத்துடன் நடிகை நயன்தாரா விளாசியுள்ளார்.
மூன்று பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தனுஷ் குறித்தும், ஏன் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் ஏன் தாமதமானது என்பது குறித்தும் கூறியுள்ளார்.
இதில் துவக்கத்தில் தனுஷ் தனது தந்தை மற்றும் அண்ணனின் துணையுடன் சினிமாவிற்கு வந்தவர் என்றும், தான் தனி ஒரு பெண்ணாக எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்.
நயன்தாரா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்.
காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த
நானும் ரௌடிதான் திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.
எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் வழக்கறிஞர் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.
கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம் உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்ட நயன்தாரா பேசியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am