நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடைந்துள்ளது: பிஎன் ரெட்டி

கோலாலம்பூர்:

இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளது.

மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி இதனை கூறினார்.

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தார்.

இந்த வருகையின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

குறிப்பாக மோடியின் வேண்டுகோளை ஏற்று மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் அன்வார் உடனடியாக அறிவித்தார்.

அதே வேளையில் பல வர்த்தக நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் மூலம் இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடைந்துள்ளது.

இதை என்னால் உறுதியாக கூற முடியும் என்று உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய ரெட்டி கூறினார்.

இந்தியா பொருளாதார ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உட்பட பல துறைகளில் அபார வளர்ச்சியை கண்டுள்ளது.

மேலும் பல வர்த்தக வாய்ப்புகளும் இந்தியாவில் உள்ளது.

இந்த வாய்ப்புகளை உலகத் தமிழ் வர்த்தகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே வேளையில் பல முக்கிய இலக்குகளுடன் இந்தப் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று பிஎன் ரெட்டி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset