நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகாவின் பதாகைகளின் தமிழ் இல்லை என ஒரு சில கட்சிக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், அவர்களின் ஆட்சியில் அமைச்சரவையில் ஒரு தமிழ் பேசும் அமைச்சரை அவர்கள்  இழந்துவிட்டனர்.

அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாதது நமது அரசியல் வரலாற்றில் இது தான் முதல் முறையாகும்.

ஆக மஇகாவை குறை கூறுபவர்கள் இந்த விவகாரத்தை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதற்கு பின் மற்ற கட்சிகளை குறை கூறலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லின் மட்டும்தானா என ஆட்சேபங்கள் எழுந்துள்ளது.

ஆனால் இதறகு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது அவர்களின் நிலைப்பாடாகும்.

அதேவேளையில் கடந்த கால பட்ஜெட்டின் போது அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னென்ன  பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset