நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டது: அமீர் ஹம்சா

கோலாலம்பூர்:

சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை தவணை முறையில் இந்தத் தளத்தைக் கட்டணம் செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது. 

மலேசிய விமான நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 46 மில்லியன் ரிங்கிட் செலுத்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 

சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளம் மலேசிய விமான நிறுவனத்திற்கு கீழ் செயல்படுகின்றது. 

2008-ஆம் ஆண்டில் மலேசிய விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளம் உட்பட முக்கிய அல்லாத வணிகங்களைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset