நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனித கடத்தலுக்கு ஆளாக்கப்படுவதில் இருந்து தகவல் தொடர்புத் துறை பட்டதாரிகள் கவனமாக இருக்க வேண்டும்: போலிஸ்

கோலாலம்பூர்:

மனித கடத்தலுக்கு ஆளாக்கப்படுவதில் இருந்து தகவல் தொடர்புத் துறை பட்டதாரிகள் கவனமாக இருக்க வேண்டும்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி முஹம்மத் ஜெய்ன் இதனை கூறினார்.

தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகள் குறிப்பாக தகவல் தொடர்புத் துறையில் பட்டம் பெற்றவர்கள், மனித கடத்தல் அல்லது குற்றச் செயல்களின் நோக்கத்திற்காக தங்கள் திறன்களைக் கையாள விரும்பும் மோசடி செய்பவர்களுக்கு பலியாகாமல் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி, கவர்ச்சிகரமான சம்பளச் சலுகைகளால் சம்பந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது.

இந்த விவகாரத்துல்  சவாலான மனித கடத்தல் வழக்குகளை போலிஸ் எதிர்கொள்கிறது.

திக நிபுணத்துவம் தேவையில்லை என்றாலும், குறைந்தபட்சம் அமைப்புகள், தொலைத்தொடர்புகளில் அடிப்படை திறன்களைக் கொண்ட நிபுணர்கள் அவர்களுக்கு இன்னும் தேவை.

ஆக இத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset