நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்

ஷா ஆலம்:

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சிறார் சித்திரவதை தொடர்பில் 387 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறார்களில் 139 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்களாகவும் 96 பேர் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலானவர்களாகவும் எஞ்சியோர் 18 வயதுக்கும்
கீழ்ப்பட்டவர்களாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறார் பராமரிப்பு மைய நடத்துநர்களே இத்தகைய குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சொந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ப்பு பெற்றோர் உள்ளனர் என்றார்.

சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிறார் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாவது சிறார் நேர்காணல் மையத்தை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரும்பாலான சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள், குழந்தைகள் அல்லது சிறார்களைத் தனியாக விடுவது போன்ற அக்கறையின்மைச் செயல்களால் ஏற்படுகின்றன என்று அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset