நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு

கோலாலம்பூர்:

சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூடப்பட்டது.

சம்பந்தப்பட்ட உணவகத்தில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உணவகம் சுத்தமாக இல்லாததை ஆய்வு செய்ததை அடுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வரும் நவம்பர் 26 வரை இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்படுகிறது.

உணவுச் சட்டம் 1983, பிரிவு 11 இன் அடிப்படையில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை இந்த உத்தரவை வழங்கியது.

இதனை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், உண்மை நிலவரத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset