செய்திகள் மலேசியா
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
தெலுக் இந்தான்:
இங்குள்ள மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும்
பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஹிலிர் பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் அத்னான் பஸ்ரி இதனை கூறினார்.
அமைதிப் பேரவைச் சட்டம் 2012ன் பிரிவு 11ன்கீழ், தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் இட உரிமையாளரின் அனுமதியைப் பெறவில்லை.
ஆகையால் இந்தப் பேரணியில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.
அப்படி பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பேரணியை ஏற்பாடு செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடமிருந்து போலிசாருக்கு திங்கள்கிழமை அறிவிப்பு கடிதம் வந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைக்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm