
செய்திகள் மலேசியா
2024-2025-ஆம் ஆண்டுக்கான Bharat Ko Janiye புதிர் போட்டி தொடங்கியது
கோலாலம்பூர்:
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 5-ஆம் ஆண்டுக்கான Bharat Ko Janiye புதிர் போட்டி தொடங்கியது.
இந்தப் புதிர் போட்டியை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் நவம்பர் 11-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மேலும், Bharat Ko Janiye புதிர் போட்டி நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறும்.
பாரத் கோ ஜானியே (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) வினாடி வினா என்பது இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மையான முயற்சியாகும்.
இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாறு மற்றும் சமகால முன்னேற்றங்கள் பற்றிய அவர்களின் அறிவை மேலோங்க செய்யும். 30 கேள்விகளுக்கு 30 வினாடிகளில் பங்கேற்பாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
14 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்துத் தகுதியுள்ள பங்கேற்பாளர்களுக்கும் பதிவு செய்வது கட்டாயமாகும். இப்புதிர் போட்டியில் பங்கேற்பாளர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் www.bkjquiz.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில் விரிவான வழிகாட்டுதல்கள், விதிகள், மாதிரி கேள்விகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
பாரத் கோ ஜானியே புதிர் போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகின்றது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களும் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகளில் அதிக கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தெரிவித்த 15 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வெற்றியாளர்கள் 2 வாரங்களுக்கு இந்தியப் பயணிப்பர். அடுத்தாண்டு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் 18-ஆவது பிரவாசி மாநாட்டிலும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
புதிர் போட்டியை நிறைவு செய்த அனைவருக்கும் மின்னியல் சான்றிதழ் வழங்கப்படும்.
25 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற பங்கேற்பாளர்கள் “சிறப்புச் சான்றிதழ்” பெறுவார்கள்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற போட்டியாளர்களின் தகவல்கள் வெளியிடப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm