
செய்திகள் மலேசியா
பினாங்கில் கார்கள் மீது கொள்கலன் விழுந்ததில் மாது மரணம்: டிரெய்லர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்பு காவல்
புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் தெங்காவில், ட்ரெய்லர் லாரி ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் ஒன்று காரின்மீது விழுந்ததில் மாது ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவர், 21 வயது லீ ஸி ரூ என்று அடையாளம் காணப்பட்டார்.
அந்த மாது போக்குவரத்து விளக்கில் காத்திருந்தபோது, எதிர்புறத்திலிருந்து வந்த லாரி திடீரென இடது பக்கம் திரும்பியது.
இதன் காரணமாக, கொள்கலன் மாதின் கார்மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் காரில் தனியாக இருந்தார் என்றும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தினால், சாலைகளின் இரு தடங்களும் தற்காலிமாகத் தடைப்பட்டன.
மற்ற சில வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்த மற்றோர் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவ்விபத்து குறித்து போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக டிரெய்லர் லோரி ஓட்டுநரையும் போலிசார் கைது செய்துள்ளனர். அவர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm