நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் படும் சிரமங்கள் ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும்; தீபாவளிக்கு பின் தான் மக்கள் உண்மையாக சிரமப்படுகிறார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மக்கள் படும் சிரமங்கள், கஷ்டங்களும் ஒரு ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும். ஆக தீபாவளிக்கு பின் தான் மக்கள் உண்மையாக சிரமப்படுகிறார்கள் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

மஇகா தேசிய தலைவருடன் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ மோகனா முனியாண்டி, சிவசுப்பிரமணியம், அண்ட்ரூ டேவிட், சுகன் ஆகியோரின் முயற்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். 

என்ன தீபாவளிக்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்று கேலியாக பேசுகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து அப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதனால் மக்கள் தீபாவளிக்கு பின்தான் அதிகம் சிரமப்படுகின்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நேரத்தில் வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் ஏழை மக்களின் சிரமங்கள் ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும்.

வாய் இருக்கிறது சமூக ஊடகங்களில் பேசுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset