நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் நலமாக இருக்கின்றேன்: சுனிதா வில்லியம்ஸ் தகவல்

வாஷிங்டன்:

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் தனக்கு உடல்நல பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன் என்று விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நலம் குறித்து வீடியோ நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறி விட்டது.

சைக்கிளிங்க், டிரெட் மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.

எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset