நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் குறித்து பினாங்கு ஆளுநரிடம் விவாதிக்கப்பட்டது: ஹமித் சுல்தான்

ஜார்ஜ்டவுன்:

மலேசியவாழ் இந்திய முஸ்லிம் சமூக பிரச்சினைகள் குறித்து பினாங்கு மாநில ஆளுநர் துன் அமாட் ஃபவ்சியுடன் விவாதிக்கப்பட்டது.

காபிம் இயக்கத்தின் தலைவர் ஹமித் சுல்தான் இதனை உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை சந்தித்து இந்திய முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய மகஜரை ஒப்படைத்தோம்.

இதனைத் தொடர்ந்து பினாங்கு ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்தோம்.

இந்த சந்திப்பில் பினாங்கில் வாழும் இந்திய முஸ்லிம் சமுதாத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மதரஸாவிற்கு தமிழகத்தில் இருந்து வரும் உஸ்தாத்களுக்கு விசா வழங்குவதில் இஸ்லாமிய வாரியம் கெடுபிடி செய்கிறது.

இதனால் எங்களின் பிரதிநிதி ஒருவர் ஜாய்ஸ் எனும் இஸ்லாமிய வாரியத்தில் நியமனம் செய்யபட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை தவிர்த்து வீட்டு பிரச்சினை, இந்திய முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி விவகாரம், குடியுரிமையில் நிலவும் சிக்கல்கள் உட்பட பல பிரச்சினைகள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சந்திப்பின் போது பினாங்கு மாநில இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆதரவாக தாம் எப்போதும் இருப்பதாக ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார் என்று ஹமித் சுல்தான் கூறினார்.

இந்த சந்திப்பில் காபிம் துணைத் தலைவர் ஹாஜி முனுவார் சாதிக், செயலாளர் அப்துல் காடிர், பொருளாளர் சையத் முஹம்மத், நிர்வாக உறுப்பினர் டாக்டர் ஜியாவுதின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset