நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருவின் உயரிய விருதான எல் சோல் டெல் பெரு விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பெற்றார்

லிமா:

பெருவின் உயரிய விருதான எல் சோல் டெல் பெரு விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெற்றார்.

இந்த விருது  மலேசியாவிற்கு மற்றொரு சர்வதேச அங்கீகாரமாக அமைகிறது.

ஸ்பெயினில் இருந்து பெரு சுதந்திரம் பெற்ற பிறகு 1821 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது அமெரிக்காவின் மிகப் பழமையான சிவில் கவுரவமாகும்.

இது சர்வதேச இராஜதந்திரத்தின் வரலாற்று சின்னமாக அமைந்துள்ளது.

பெரு நாட்டின் அரச அரண்மனையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது கௌரவமான இந்த விருதை பெரு நாட்டின் அதிபர் டினா எர்சிலியா பொலுவார்டே ஜெகர்ரா வழங்கினார்.

இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து மலேசியர்களுக்கும் இது ஒரு கௌரவமாக கருதுவதாக கூறினார்.

மலேசியர்கள் சார்பாக இந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

மலேசியாவிற்கும் பெருவிற்கும் இடையிலான வலுவான நட்பின் அடையாளமாக இதை நாங்கள் பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset