நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களவையில் கணபதிராவின் புகார்களை கேட்டு அழுது விட்டேன்: அஹ்மத் ஃபாட்லி

கோலாலம்பூர்:

மக்களவையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் புகார்களை கேட்டு அழுது விட்டேன்.

பாசிர் மாஸ் நாடாளுமனற உறுப்பினர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி இதனை கூறினார்.

அரசு அளிக்கும் ஒதுக்கீடு அனைத்து பகுதிகளிலும் சமமாக இருந்தால்,

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தான் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து கணபதிராவ் மக்களவையில் பேசினார்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் 215,000க்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதால் நிலைமையை நடைமுறைப்படுத்தினால் அது நியாயமற்றதாகக் கருதப்படுகிறது என்று கணபதிராவ் கூறினார்.

கணபதிராவின் புகார்களை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

அதே வேளையில் கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் எவ்வாறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதைக் கேட்டு மனவேதனையும் வருத்தமும் அடைந்தேன்.

2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் கூறுகையில், நான் கிட்டத்தட்ட கண்ணீர் விட்டேன், கண்ணீர் சிந்தினேன், மனம் நெகிழ்ந்தேன், வருத்தமடைந்தேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset