நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த  ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர்:

தாயை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த  ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா இதனை கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு தன் தாயை அடித்து கொலை செய்த 53 வயது மகன், அவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

இந்நிலையில் தாயின் மரணம் குறித்து போலிசுக்கு தகவல் கொடுத்ததும் அவரே சரணடைந்தார்.

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு கடந்த கால குற்றவியல் பதிவுகள் இல்லை.

மேலும் மருத்துவமனையின் சுகாதார அறிக்கை, பாதிக்கப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலிசார் இன்னும் காத்துள்ளனர்.

இவ்விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது.

இதனால் கைதான ஆடவர் வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை அதாவது ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset