நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது: அடுத்த மூன்று மாதங்களுக்கு மழை வெளுத்துக் கட்டும்

கோலாலம்பூர்:

அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மலேசியாவில் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை நவம்பர் தொடக்கம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad Helmi Abdullah) கூறியுள்ளார்.

மொத்தம் ஆறு தொகுதிகளாக மழைப்பொழிவு இருக்கும்  என்றும், கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் கோடிகாட்டி உள்ளார். நவம்பர் முதல் ஜனவரி மாதத்துக்குள் ஆறு தொகுதி மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Making It Rain: Malaysia Seeds Clouds To Combat Smog From Forest Fires

"அச் சமயம் கிளந்தான், திரங்கானு, பகாங் மாநிலங்களில் டிசம்பர் மாதம் வரை அதிக மழை பெய்யும். இதேபோல் டிசம்பர் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஜோகூர், சபா, சரவாக்கில் அதிக மழை அளவு பதிவாகும்.

"தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் வீசும் வலுவான குளிர்காற்று வானிலையின் போக்கில் ஆதிக்கம் செலுத்தும்.  வடகிழக்கு பருவமழையானது இம்முறை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் அதிகளவு பெய்யும்.

"கிளந்தான், திரெங்கானுவில் சுமார் 450 மில்லிமீட்டர் தொடங்கி அதிகபட்சமாக 1,000 மில்லி அளவிலான மழை பெய்யக்கூடும். பெரும்பாலும்  அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் சராசரி அளவில் மழையை எதிர்பார்க்கலாம்," என்றார் முஹம்மது ஹெல்மி அப்துல்லா.

தொடர்புடைய செய்திகள்

+ - reset