நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வலுவாக மீண்டு வருவோம்: மலேசிய ஏர்லைன்ஸ் நம்பிக்கை

கோலாலம்பூர்:

கொரோனா நெருக்கடியை மீறி வலுவாக மீண்டு வருவோம் என மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்நிறுவனம் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளது.

சிக்கலற்ற சுமுகமான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும், ஊழியர் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

"பெருந்தொற்று காலக்கட்டத்தில் பல விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அது எளிதான விஷயம் அல்ல. எனினும் நாங்கள் அவ்வாறு செய்யாமல் ஊழியர்களை தக்க வைத்துக்கொண்டோம். இப்படியொரு சூழல் உருவாகும் என்பதை உணர்ந்திருந்தோம். அதனால் இப்போது செயல்படத் தயாராக உள்ளோம்," என்றார் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சந்தை மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் அதிகாரி லாவ் இன் மே (Lau Yin May).

மீண்டும் விமானப் பயணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அனைத்து ஊழியர்களும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய விமான நிறுவனம் என்ற அடிப்படையில் விமானச் சேவைக்கும் அப்பால் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

"எதிர்காலத்தில் தங்கள் திறமையை நிரூபிக்கக்கூடியவர்கள், விமானப் போக்குவரத்து மற்றும் பயணத்துறைகளில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் திறமைசாலிகளை அங்கீகரிக்கும் பணியும் எங்களுக்கு உள்ளது," என்றார் லாவ் இன் மே (Lau Yin May).

உலகெங்கிலும் கொரோனா நெருக்கடி வேளையில் விமானப் போக்குவரத்து துறையில் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்தனர். பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிறுவனங்கள் மூடப்பட்டன, முடங்கிப் போயின.

தற்போது பயணக் கட்டுப்பாடுகள் நீங்கியுள்ள நிலையில், திடீரென பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்களால் உரிய வகையில் சேவையாற்ற மு டியவில்லை. ஊழியர் பற்றாக்குறை, குறிப்பாக போதுமான விமானிகள் இல்லாததால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

மலேசிய ஏர்லைன்ஸில் 11 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 1,049 பயணிகளும், 2,034 விமானப் பணியாளர்களும் அடங்குவர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset