நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் அரசு அறிவிப்பு: 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவர அனுமதி

சிங்கப்பூர்:

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள பயணத்தடத் திட்டத்தின்கீழ் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் பயணம் மேற்கொள்ளலாம் என சிங்கப்பூர் பொது விமானத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

அந்தக் குழந்தைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனித்து பயணம் மேற்கொள்ள குழந்தைகளுக்கு  அனுமதி இல்லை. பயணம் மேற்கொள்ள உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்யக்கூடிய, தகுதி பெற்ற பெரியவர்களுடன் இணைந்து பயணம் செய்ய இயலும் என அந்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்குமுன் 48 மணி நேரத்திற்குள்ளும் இங்கு வந்திறங்கியதும் அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இச்சோதனை தேவையில்லை.

"தொடக்கத்தில் இந்தப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் 12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் பயணம் செய்ய அனுமதி தரப்படவில்லை. ஆனால், குடும்பத்தினர் அனைவருடனும் சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாடு செல்ல விரும்புவதால் அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது," என சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டதாக தமிழ்முரசு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset