நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழ்ச்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் காலமானார் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80 ஆகும் 

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் அதிகமாக நடித்த என்ற பெருமையையும் நடிகர் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார் 

!976ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பட்டின பிரவேசம் எனும் திரைப்படத்தின் மூலம் டெல்லி கணேஷ் அறிமுகமானார். 

சிந்து பைரவி, நாயகன், மைக்கல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தினார் 

சென்னை ராமாவரத்தில் உள்ள இல்லத்தில் இறுதியஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகை ஆழ்ந்த வருத்ததிற்குக் கொண்டு சென்றது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset