நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெடிப்பு சம்பவம் காரணமாக வங்சா மாஜுவில் வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்: டிபிகேஎல்

பெட்டாலிங் ஜெயா: 

வெடிப்பு சம்பவம் காரணமாக வங்சா மாஜுவில் வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், டிபிகேஎல் தெரிவித்துள்ளது. 

கட்டுமானப் பணியிடத்தில் கட்டடக் கட்டமைப்பு செயலிழந்து வெடிப்பு ஏற்பட்டதால் அங்குக் கட்டுமானப் பணிகளை நிறுத்த டிபிகேஎல் உத்தரவிட்டுள்ளது. 

J Satine வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக PPR Wangsa Sari குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எட்டாவது தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள யூனிட்களில் சுவர் அமைப்பு, தூண்கள் மற்றும் தளங்களில் விரிசல் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும், சுயாதீன பொறியாளரின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. 

திட்டக் கட்டுமானம் இடைநிறுத்தப்படும் காலம் இந்த விஷயத்தை செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset