நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம், மதப் பிரச்சனையை உடனடியாகக் கட்டுப்படுத்த பேராக் சுல்தான் உத்தரவு

கோலா கங்சார்: 

மதம், இனம் குறித்த பிரச்சனை இந்த நாட்டு மக்களின் ஒற்றுமையை அச்சுறுத்தும் அரசியல் கருவியாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டார். 

அரசியல் இலாபம் பெறுவதற்காக மதத்தையும் இனத்தையும் முறையான நாணயமாகப் பயன்படுத்தும்போது, ​​மதத்தின் பெயரால் மூர்க்கத்தனமான பேச்சுகளும் இனத்தின் பெயரால் ஆத்திரமூட்டும் முழக்கங்களும் பெருகிய முறையில் தூண்டப்படுகின்றன என்று சுல்தான் நஸ்ரின் கூறினார்.

இத்தகைய சொல்லாடல்களும், கோஷங்களும் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட்டின் அழிவிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து தூண்டிவிடப்படும் மத மற்றும் இனப் பிரச்சனைகள் மக்களிடையே தவறான எண்ணத்தையும் சந்தேகத்தையும் விதைத்துவிடும் என்று அஞ்சுவதாகவும், ஒற்றுமைக்கான ஒரு புள்ளியைக் கண்டறியும் திசையை இழந்து வருவதாகவும் சுல்தான் நஸ்ரின் கூறினார்.

எனவே, இந்த நாட்டில் இனங்களின் பன்முகத்தன்மையை மனம் திறந்து பாராட்டாமல், தப்பெண்ணங்கள் இல்லாமல், மக்களை சுகமாகவும் வசதியாகவும் உணர அனுமதிக்கும் ஒரு தலைவரின் ஞானமும் விவேகமும் நாட்டிற்கு தற்போது தேவை என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset