நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கார் லைசன்ஸை வைத்து சரக்கு வாகனங்களை இயக்கலாம்: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

கார்களை இயக்க வழங்கப்படும்  இலகுரக வாகன (MLV) ஓட்டுநர் உரிமத்தை வைத்து கொண்டு 7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்கலாம் என்று இந்தி்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விபத்தில் சிக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிப்பதை தடுக்கும் வகையில் உரிம விதிமுறைகள் பற்றியும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

இது தொழில்ரீதியான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை என்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல், மோசமான சாலை, கைப்பேசி பயன்பாடு, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது ஆகியவை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களாகும் என்றும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset