நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு

புது டெல்லி: 

ஓய்வு பெற்று 8 மாதங்களாகியும் அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் இருந்து பங்களாவை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு உச்சநீதிமன்ற நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

சந்திரசூடுக்குப் பிறகு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, தனது 6 மாத கால பதவிக் காலத்தில், கிருஷ்ண மேனன் மார்க் பங்களாவுக்கு மாறவில்லை; அதேபோல், பி.ஆர்.கவாயும் தனக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்திலேயே வசிப்பதாக தெரிவித்துவிட்ட நிலையில், கிருஷ்ண மேனன் மார்க் பங்களாவில் சந்திரசூட் தொடர்ந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாற்றுத் திறனாளி மகள்களின் தேவைகளுக்கு ஏற்ப வீடு கிடைக்கவில்லை என்ற அவகாச கோரிக்கைக்கு சஞ்சீவ் கன்னா ஒப்புதல் வழங்கினார். ஆனால் அதையும் கடந்து அரசு பங்களாவில் சந்திரசூட்  வசித்து வருவதாக கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset