நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்

மும்பை:

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவர் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்தியைத் திணிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக அந்த மாநில எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவும் ஹிந்தி எதிர்ப்பை தீவிரமாக  நடத்தி வருகின்றன.

மும்பை புறநகர் பகுதியில் இந்த இரு கட்சியினரும் ஹிந்தி பேசிய கடைக்காரர் ஒருவரை மராத்தியில் பேசுமாறு அடித்து உதைத்த விடியோ அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இது மகாராஷ்டிரத்தில் உள்ள ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது பஹல்காம் தாக்குதலைப் போன்றது என்று பாஜக விமர்சித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset