நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது

புது டெல்லி: 

இந்தியா பாகிஸ்தான் இடையே  மே மாதம் ஏற்பட்ட சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது என இந்திய ராணுவ லெப்டினன்ட் னெரல் ராகுல் ஆர். சிங் தெரிவித்தார்.

மேலும், இந்த சண்டையில் சீனா தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாகவும் பயன்படுத்திக் கொண்டது என்றார்.

பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது.  இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

அப்போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கி இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா தூண்டியது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்களில் 80 சதவீதத்துக்கு மேல் சீன தயாரிப்புகள்தான்.

ஆனால், இந்த சீன ஆயுதங்களை இந்தியா திறமையாக சமாளித்தது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் ஆயுத உதவிகளை வழங்கியது. இதை இந்தியா வலிமையாக எதிர் கொண்டது என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த சண்டையின்போது  பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப் படை தளத்தை இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை தாக்கியது என்று அந்நாட்டு பிரதமரின் ஷாபாஸ் ஷெரீஃபின் ஆலோசகர் ராணா சனாவுல்லா ஒப்புக் கொண்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset