நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்

புது டெல்லி: 

சர்வதேச இணையச் செய்தி ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது.

இதற்கு இந்திய அரசு பொறுப்பேற்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் உள்பட பல எக்ஸ் வலைதளக் கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அப்போது வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தற்போது தவறுதலாக எக்ஸ் நிறுவனம் ராய்ட்டர்ஸ்  கணக்கை முடக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும், இந்திய அரசின் கோரி்க்கையை ஏற்றுதான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக எக்ஸ் வலைதளம் குறிப்பிட்டுள்ளது.  

இதற்கு இந்தியா மறுத்துள்ளது. அதேபோல் சீன செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ், துருக்கி செய்தி நிறுவனமான டிஆர்டி வேர்ல்ட் ஆகியவற்றின் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டன. பின்னர் சில மணி நேரங்களில் அந்தக் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset