
செய்திகள் இந்தியா
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவிஷா 2014-இல் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி, குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவிஷா காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாலேயே விபத்து நடந்துள்ளது. எனவே, இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் ரவிஷா குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ரவிஷா அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்து மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm