நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி 

கடலூர்: 

கடலூர் மாவட்ட செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று மாணவர்கள் பலியானதாக அதிர்ச்சியூட்டும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறினார். 

கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

இந்த கோர பள்ளி வேன் - ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset