
செய்திகள் இந்தியா
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
புதுடெல்லி:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் ஏ320 விமானத்தின் முக்கிய இயந்திரப் பாகங்களை மாற்றுவதில் தாமதித்ததுடன், பின்னர் பராமரிப்புப் பதிவேடுகளைத் திருத்தி அதை மறைக்க முயன்றதை இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்த மாற்றங்களைத் தவறவிட்டதற்கு மென்பொருள் கோளாறே காரணம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூறியது. இருப்பினும், போலி ஆவணங்கள் கடுமையான பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளன.
தர மேலாளர் பணிநீக்கம், மற்றோர் ஊழியர் இடைநீக்கம்
டிஜிசிஏ இந்த சிக்கல்களைச் சுட்டிக்காட்டியவுடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது தவற்றை ஒப்புக்கொண்டதுடன், விரைந்து நடவடிக்கை எடுத்தது.
அதன் தர மேலாளரைப் பணியிலிருந்து நீக்கியதுடன், விமானப் பராமரிப்புக்கு பொறுப்பு வகித்த மற்றொரு மூத்த ஊழியரை பணியிடைநீக்கம் செய்தது.
இது மீண்டும் நிகழாமல் தடுக்க புதிய சரிபார்ப்புகளை அமல்படுத்தியுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கடுமையான பாதுகாப்பு விதிகள் ஏன் முக்கியம் என்பதையும் விதிமுறைகளை மீறுவது, விமானப் பயணத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை எவ்வாறு அசைக்க முடியும் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm