
செய்திகள் இந்தியா
இந்தியாவில் சில பணக்காரர்களிடம் மட்டுமே செல்வம் குவிகிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கவலை
நாக்பூர்:
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சில பணக்காரர்களிடமே செல்வம் குவிகிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. ஒரு சில பணக்காரர்களிடமே செல்வம் குவிந்து வருகிறது. அப்படி நடக்கக்கூடாது.
வேலைவாய்ப்புகளையும் கிராமப்புறங்களையும் மேம்படுத்தும் விதமாக பொருளாதாரம் வளர வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமான பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.
செல்வத்தைப் பரவலாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த திசையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தாராளமயமாக்கலை ஏற்று கொண்டதற்காக பாராட்டுகிறேன்.
ஆனால் கட்டுப்படுத்தப்படாத மையப்படுத்தல் பற்றி கவனம் தேவை. சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.55,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதைப் பணமாக்கினால், ரூ.12 லட்சம் கோடி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm