நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு

புது டெல்லி:

மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த சாத்தியமில்லை என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புதற்குத் தடை விதிக்கும் நடைமுறை தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை  அமலுக்கு வந்தது. பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் அபராதத்தை செலுத்திவிட்டு தில்லிக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். கேட்பாரற்ற வாகனங்கள் அழிக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு தில்லி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இதை தில்லி BJP அரசு கைவிட்டது.

இந்தத் தடையை நீக்கக் கோரி ஒன்றிய அரசின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடம் தில்லி அரசு கோரிக்கை விடுத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset