நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெலங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

ஹைதராபாத்:

தெலங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு புதன்கிழமை முதல் தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானாவில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்புக்கு முந்தைய கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது இந்தக் கணக்கெடுப்பு நாட்டுகே முன்னுதாரணமாக அமையும். நாட்டில் மக்களிடம் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடி விரும்பவில்லை.

அரசின் உயர் பதவிகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஊடக முக்கிய பதவிகளில் எத்தனை தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset