நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மதிப்பளிக்க வேண்டும்: ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த்

புது டெல்லி: 

வக்பு சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணர்வுக்கு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய னதா தளம் கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஏஹிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வக்பு மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

தில்லியில் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜாமியத் உலமாஏஹிந்த்  அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி பேசுகையில், முன்னோர்களால் வக்பு முறை உருவாக்கப்பட்டது. இந்தச் சொத்துகளுக்கு இறைவன்தான் உரிமையாளர்.

வக்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள சில மசூதிகள் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையானவை. இந்த மசூதிகளை அபகரிக்க ஒரு கூட்டம் முயற்சிக்கிறது.

500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மசூதிக்கான ஆவணங்களை யாரால் வழங்க முடியும்?

தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு,  ஜேடியு தலைவருமான நிதீஷ் குமாரும்தான் பாஜக அரசுக்கு ஊன்றுகோல்களாக உள்ளனர்.

முஸ்லிம்களின் உணர்வுகளை புறக்கணித்துவிட்டு வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், அதற்கு பாஜகவுடன் கூட்டணியில் உள்ள டிடிபி, ஜேடியு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை அவ்விரு கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset